Posts

Showing posts from April, 2018

முல்லைப்பாட்டு – அறிமுகம்

முல்லைப்பாட்டு – அறிமுகம் பாட்டும் புலவரும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும்   பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன .   பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் முல்லைப்பாட்டும் ஒன்று . அது   103 அடிகளைக்கொண்ட சிறிய பாடல்.   இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது . முல்லைப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் . இவருடைய பெயருக்கு முன் சிறப்புப் பொருளைத்தரும் ” ந ” என்னும் எழுத்தையும் , பெயருக்குப்பின் , உயர்வைக் குறிக்கும் “ ஆர் ” விகுதியையும் சேர்த்து இவர் நப்பூதனார் என்று அழைக்கப்பட்டார் . நக்கீரனார் , நக்கண்ணையார் , நத்தத்தனார் , காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதலிய பெயர்களில் ” ந ” என்னும் சிறப்பு எழுத்து   இடம்பெற்றிருப்பதுபோல்   இவர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது . இவர் இயற்றியதாக முல்லைப்பாட்டு மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது .   இவர் தந்தையார் பொன்வாணிகனார் என்பதும் அவர் சோழ

முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைப்பாட்டு மூலமும் உரையும் கார்காலத்தில் மழைபொழியும் மாலை நேரம் : நனந்தலை உலகம் வளைஇ , நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல , நிமிர்ந்த மாஅல் போல , பாடுஇமிழ் பனிக்கடல் பருகி , வலன் ஏர்பு , கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி             பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை ,                          (1 - 6) அருஞ்சொற்பொருள் : 1. நனம் = அகற்சி ; தலை = இடம் ; வளைஇ = வளைத்து ; நேமி = சக்கரம் ; 2. வலம்புரி = வலமாகச் சுழிந்திருக்கும் சங்கு ; பொறித்த = வைத்த ;   மா = திருமகள் ; தாங்கு = தாங்குகின்ற ; தடக்கை = பெரிய கை ; 3. நீர் செல = நீரை வார்க்க ; நிமிர்ந்த = உயர்ந்து நின்ற ; மாஅல் = மால் = திருமால் ;   4. பாடு = ஒலி ; இமிழ்தல் = ஒலித்தல் ; பனிக்கடல் = குளிர்ந்த கடல் ; பருகி = குடித்து ; வலன் = வலிமை ; ஏர்பு = எழுந்து ; 5. கோடு = மலை ; கொண்டு = குறித்து ( நோக்கி ) ; கொடுஞ் செலவு = விரைந்து செல்லல் ; எழிலி = மேகம் ; 6. பெயல் = மழை ; பொழிந்த = பெய்த ; சிறு = சிறுபொழுது ; புன் = துன்பம் . உரை : சக்கரம் , வலம்புரிச் சங்கு ஆகியவற்றைத் தன் பெர