அமெரிக்காவில் திருக்குறள் ஆவணப்பட வெளியீட்டு விழா திருக்குறள் பற்றிய ஆவணப்படம் முதல் முறையாக ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு, ஜப்பானியம் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது . சீனம், ஜெர்மன், ஸ்பேனிஷ், தமிழ் ஆகிய மொழிகளிலும் இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இதன் ஆங்கில வடிவம் நவம்பர் 16 ஆம் நாள் வாசிங்டன் அருகே உள்ள வெர்ஜீனியாவில் உள்ள ஸ்டர்லிங் என்ற இடத்தில் திரையிடப்பட்டது. இதற்குத் திரைக்கதை எழுதியுள்ள டாக்டர் ஆர். பிரபாகரன் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் இப்பட்டதைத் தயாரித்துள்ளார். இவர் திருக்குறள் மாநாட்டை அமெரிக்காவில் நடத்தியவர்; திருக்குறள் தொடர்பான பல நூல்களை எழுதியவர். திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் இன்றைய இளம் தலைமுறைத் தமிழர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் இப்படம் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவம் இப்படத்தின் கருப்பொருளாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையின் மாவட்ட ஆட்சியாளராக இருந்த எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் மொழிபெயர்த்...